பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

27

(இ) காங்கேய காலாயிரக் கோவை,

இந்நூல் தம்மை இளமைக் காலத்தில் ஆதரித்த புதுவைக்காங்கேயன் மீது கூத்தரால் பாடப் பெற்றது. இந் நூல் கிடைக்கவில்லை. நானுாறு பாடல்களால் பாடப் படுவதே கோவையாக, இவர் நாலாயிரம் பாடல்களால் கோவை பாடினார் என்றால் இவரின் புலமையை என் னென்பது! சிலர் நாலாயிரக் கோவை என்பதற்கு காங்கேயன் ஊர் நாலாயிரம் என்றும், அதனைச் சிறப்பித்து நானூறு பாடல்களால் பாடிய கோவை என்றும் கூறுவர்.

(ஈ) எதிர் நூல்

நூலின் வகைகளில், எதிர்நூல் என்பதும் ஒன்று இதன் இலக்கணம்

எதிர்நூல் என்ப ஒருசா ரோரே. '

என்று பேராசிரியரால் தொல்காப்பிய உரையில் காட்டப்

படுகின்றது. இத்தகைய நூல் ஒன்று கூத்தர் இயற்றியிருக்க வாம். ஆனால் அந்நூல் இப்போது கிடைக்கவில்லை.

3. ஐயத்திற்குரிய நூல்கள்

Iron

கண்டன் கோவை, கண்டன் அலங்காரம், தில்லை _லா, ஈட்டி எழுபது, எழுப்பெழுபது என்னும் நூல்களும் _க்கூத்தர் பாடினார் என்று கூறுகின்றனர். ஆனால் | நூல்கள் இவரால் இயற்றப்பட்டன என்று கூறுதற்குப் போதிய சான்றுகள் இல்லை.

இனி, இப் பகுதியில் ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவரு லாவும், தக்கயாகப் பரணியும் அவர் பாடியனவாகக் கருதப்படும் தனிப் பாடல்களிற் சிலவும் ஆராயப்படு ன்ெறன. இவ் ஆராய்ச்சியின் நோக்கம், ஒட்டக்கூத்தர் இந் நூல்களிற் காட்டியுள்ள கற்பனை வளத்தினையும்,