பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28

புலமைச் சிறப்பினைனயும், வரலாற்று உணர்வினையும் புலப்படுத்துவதேயாம்.

முதற்கண் சிறுபிரபந்த வகைகள் குறித்து ஒரு சிறிது காண்போம்:

சிறுபிரபந்த வகைகள்

சிற்றிலக்கியங்கள் பிற்காலத் தெழுந்தனவாம். அவை தொண்ணுாற்றாறு வகைப்படும். தொல்காப்பியம் குறிப் பிட்டுள்ள விருந்து என்னும் வகையைச் சேர்ந்த இலக்கிய வகைகளில் இச் சிற்றிலக்கியங்கள் அடங்கக் காணலாம். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவராகக் கருதப் படும் படிக் காசுப் புலவர், சிவந்தெழுந்த பல்லவன் என்னும் வள்ளல் மீது பாடிய சிவந்தெழுந்த பல்லவராயன் உலா நூலில்,

  • தொண்ணுாற்றாறு கோலப்ர பந்தங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக இச் சிற்றிலக்கியங் களில் புலவர் பெருமக்களின் நூலறிவும், உலகியலறிவும், கற்பனைத் திறனும், காவிய நயமும், அணிநலனும், கற்பார்தம் உள்ளத்தைக் கவரும் வருணனைத் திறனும் கண்டு தெளிவதோடு, அவ்வப் புலவர் பெருமக்கள் காலத்தில் வாழ்ந்த அரசர், அமைச்சர், படைத்தலைவர், வள்ளல்கள் முதலானோரின் வீரமும் ஈர நெஞ்சமும் அறப்பணி போற்றிய அருங்கொடை மணமும் கண்டு தெளியலாம் என்பர்.

இனி, இவர் நூல்களில் மூவருலா-தக்கயாகப் பரணி ஆகிய இருநூல்களில் மட்டும் அமைந்துள்ள சிறப்புச் செய்திகளைக் காணலாம்.

1. மூவருலா உலாப் பிரபந்தம் பாடுதலில் ஒட்டக்கூத்தர் வல்லவர்

என்பது வெளிப்படை.