பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29

_பேதை முதலா எழுவகை மகளிர்கண்

தொடங்கிய வகை நிலைக் குரியான் ஒருவனைக் காதல்செய் தலின்வருங் கலிவெண் பாட்டே

என்ற நூற்பா உலாவின் இலக்கணத்தை உணர்த்தும். அவிவெண்பாவான் இயன்று ஒரடி எதுகை பெற்று அமைந்த கண்ணிகள் விக்கிரமசோழன் உலாவில் 342, இரண்டாம் குலோத்துங்க சோழன் உலாவில் 337, இரண்டாம் இராசராச சோழன் உலாவில் 391, ஆக 1120 கண்ணிகள் மூவருலாவில் அமைந்துள்ளன. குலோத்துங்க சோழன் உலாவுக்கு மட்டும் பழைய உரை உள்ளது. ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை. ஆயினும் இவர்தம் உரையில் தொல்காப்பியம், பரிபாடல், பெருங்கதை முதலிய நூல் களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டியிருப் பதனால் இவர் தென்மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் பு ல ைம மிகுந்தவர் என்பதனை

அறியலாம்.

தம் வழிபடு தெய்வத்தின் மீதும், ஆசிரியர் மீதும் தம்மை ஆதரித்த உபகாரி மீதும் புலவர் உலா பாடுவர். மூவருலா, ஒட்டக்கூத்தரால் தம்மை ஆதரித்த அரசர்கள் மூவர் மீது பாடப்பட்டுள்ளது. இம் மன்னர்கள் பட்டத்து யானை மீது பவனி வந்ததாக மூவருலா குறிப்பிடுகின்றது. பாட்டுடைத் தலைவர்களுடைய முன்னோர் பெருமையினை முதலில் கூறிப் பின்னர் அவர் பெருமையினைக் கிளத்தி, அவர் நீராடுதல், பட்டத்து யானையில் பவனி வருதல், _ன் வருவோர், மகளிர் குழாம் மன்னர்களைக் காத்திருந்து காணல் முதலான செய்திகளை முற்பகுதியில் கூறுகின்றது. பிற்பகுதி, பேதை முதல் பேரிளம் பெண் ாறாகவுள்ள ஏழு பருவ மகளிரின் இயல்புகளையும் விளையாட்டுக்களையும் கூறித் தலைவரைத் தரிசித்த வழி அவர்கள் பெற்ற உணர்வுகளைக் கிளத்தி நிற்கின்றது.

26. பன்னிருபாட்டியல்