பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30

மூவருலாவில், தலைவன் உருவத்தைக் கிழியில் வரைதல், பந்து, அம்மானை ஆடல், மது அருந்துதல், தலைவன் நிறத்திற்கு ஏற்ப உடுத்தல், அணி பூணல், பூக்கொய்தல், புனலாட்டு, கழங்காடல், சிற்றில் இழைத்தல் முதலான விளையாட்டுக்கள் மகளிர் மேற்கொண்ட விளையாட்டுக் களாக இடம் பெற்றிருக்கக் காணலாம்.

மூன்று உலாக்களின் தொடக்கக் கண்ணிகளே ஒட்டக்கூத்தரின் மி டு க் கு நடைக்குக் கட்டியங்கூறி நிற்கின்றன.

சீர்தங்த தாமரையாள் கேள்வன் திருவுருவக்

கார்தங்த உங்திக் கமலத்து - விக்கிரமசோழன் உலா

தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம் போர்மேவு பாற்கடல் பூத்தனையோன்

- குலோத்துங்கசோழன் உலா

புயல் வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச் செயல் வண்ணங் காட்டிய சேயோன்

- இராசராச சோழன் உலா

தாம் சிறந்த சைவராயிருப்பினும், தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்ப, சோழர்குலப் பெருமையைக் கூறவந்த ஒட்டக்கூத்தர், அக் குலம் சூரிய குலம் ஆன காரண த்தினால் அக்குல முதல்வனார் திருமாலைத் தக் காங்கு புகழக் காணலாம்.

இது போன்றே அறச் செங்கோல் நாட்டிய சோழர் குல முன்னோன் மாந்தாதாவைக் கூத்தர் ஒவ்வோர் உலாவிலும் கூற வந்த ஒரு செய்தியினையே வேறுவேறு சொற்களைக்

கையாண்டு திறம்பட உரைப்பதனைக் காணலாம்:

ஆடுதுறையில் அடுபுலியும் புல்வாயும் கூட நீ ரூட்டிய கொற்றவன்.'" - விக்கிரம : 5

27. விக்கிரமசோழன் உலா, 5.