பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

34

பட்டத்து யானையில் பவனிவரக் கண்ட தலைவனைக் கண்டு தன் தாய் நடந்து கொண்டது போன்றே பேதையும் நடந்து கொண்டாள் என்று பின்வருமாறு கூறும் கூத்தரின் கூற்றில் அவர்தம், உளவியல் நுட்பம் உணரும் திறம் கண்டு தெளியலாம்.

தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுது தாயர் மொழிந்தனவே தான் மொழிந்தாள் !

டவிக்கிரம : 122 அடுத்து, பேதைப் பருவங்கடந்து பெதும்பைப் பருவம் வந்தடைந்த நிலையுடைய பெண்னைப் பு ல வ ர் வருணிக்கும் வகையில் அப் பெண்ணின் உடல், உள்ள வளர்ச்சியினை ஒருங்கே காணலாம்:

-ஒருத்தி மழலை தனது கிளிக்களித்து வாய்த்த

குழலி னிசைகவர்ந்து கொண்டாள் - கிழல்விரவு முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின் பின்னர் நகைகொண்ட பெற்றியாள் - கன்னி மடநோக்கங் தான்வளர்த்த மானுக் களித்து விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள்- சுடர்நோக்கும் தானுடைய மெய்நுடக்கந் தன்மா தவிக்களித்து வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் - பூநறும் பாவைகள் பைங்குர வேந்தப் பசுங்கிளியும் பூவையு மேந்தும் பொலிவினாள் - மேவும் மடநடை யன்னப் பெடைபெறக் கன்னிப் பிடிநடை பெற்றுப் பெயர் வாள் - சுடர்கனகக் கொத்துக் குயின்ற கொடிப்பவள பங்தத் தின் முத்துப் பொதியுச்சி முச்சியாள் - எத்திறத்தும் விரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல் மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் - நேரொத்த கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற் பூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள்.

-விக்கிரம : 1.34 - 143

41. விக்கிரம சோழன் உலா, 122. 42. 3 * , 134-143.