பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

நாகரிகம் என்று இன்றும் நாகரிக மங்கையர் மேற். கொள்ளும் நெறியன்றோ இது. முருகப் பெருமானைப் பரவும் பாரதம் பாடிய பெருந்தேவனாரும் முருகனின் செந் நிறத்தைப் பின்வருமாறு கூறியிருக்கக் காணலாம்.

தாமரை புரையும் காமர் சேவடி பவளத் தன்ன மேணித் திகழொளிக் குன்றி யேய்க்கும் உடுக்கை, குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்." முருகனின் திருவடிகளும் செந்நிறம்; திருவுருவமும் செந்நிறம்; ஆடையும் செந்நிறம், கைவேலும் செந்நிறம் என்று இப்பாடலில் புலவர் கூறியுள்ளார்.

மேலும் கூத்தர் அக் கால மகளிர் அணிந்த ஆபரண வகைகளைப் பின்வருமாறு கூறியுள்ளார்:

-கொணர்ந்தணிந்த சூடாமணியும் பணிவ ளையுஞ் சூடகமும் கோடா மணிமகர குண்டலமும்-ஆடிய கலைசையும் மாலையும் ஆரமும் தாமழும் கச்சையும் மேகலையும் காஞ்சியும்-பச்சென்ற பட்டும் குறங்கணியும் பட்டிகையும் நூபுரமும் கட்டும் கனவயிரக் காறையும். * கதிரவனை வருணிக்கும் கவிஞர் கூற்றில் பாட்டோட் டத்தினைக் கண்டு மகிழலாம்: *

  • அடுத்தடுத் தேங்திய திவ்யா பரணம்

எடுத்தெடுத் தொப்பித் தெழுந்து-சுடர்க்கதிரோன் மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த காலைத் துணைவியைக் கண்டெழுந்தாள். ஒட்டக்கூத்தரின் கற்பனை வளத்திற்கு கீழ்க்காணும் பகுதிகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

F - 4 Н.

- - - -

46. குறுந்தொகை : கடவுள் வாழ்த்து. 47. இராசராச சோழன் உலா, 321-324. 48. குலோத்துங்க சோழன் உலா, 267.268.