பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40

மூண்ட:அமர்களத்து மூரிக் களிறட்ட ஆண்டகை யைப்பரணி யாய்ந்துரைக்க-ஈண்டிய நேரடியே யாதியா நீண்டகலித் தாழிசை

ஈரடிகொண் டாதியுட னிறு'

-வெண்பாப் பாட்டியல்: 38

ஆனை யாயிர மமரிடை வென்ற மான வனுக்கு வகுப்பது பரணி'

இலக்கண விளக்கப் பாட்டியல்: 838

பரணியின் உறுப்புக்கள்

1. கடை திறப்பு, 2. பாலை கூறல், 3. கோயிற் சிறப்பு, 4. காளியைப் போற்றல், 5. இந்திரசாலம், 6. மன்னன் மரபுரைத்தல், 7. போர்ச்சிறப்பு உரைத்தல், 8. போர்க் களம் காணல், 9. கூழ் சமைத்து வார்த்தல், 10. மன்னனை வாழ்த்தல்.

இனி, பரணியின் பெயர்க் காரணத்தை ஆராய்வோம்.

பரணி-பெயர்க் காரணம்

தினைப் புனத்தில் காவல் செய்வோர் ஒரு பரண் மீது அமர்ந்து, தினையை அழிக்க வரும் பறவையினங்களைத் துரத்துவது போன்று, போர்க்களத்தில் வீரன் யானை மீதிருந்து எதிரிகளைத் துரத்துவதால் இச்செய்தி பற்றிக் கூறும் இந்நூல் பரணி எனப்பெயர் பெற்றது என்பர் இலர்.

தினைப்புனங் காப்போர் பரண்மீது இருந்து பறவை களைத் துரத்தப் பாடுதல் போல, அரசனின் வில்வேல்,

61. வெண்பாப் பாட்டியல், 38. 62. இலக்கண விளக்கப் பாட்டியல்: 838.