பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45

பிணங்கடுங்கனலு மின்றி.வெங்துகில வாய்கிமிர்ந்துயில வாயபேய் நிணங்கரைந்துருக நெய்யைநீரென

நினைந்துநாவினை நனைக்குமே." தேவி வருனனை யாமள நூலிற் கண்டபடி கூறப் பட்டுள்ளதாகக் குறிப்பிடுவர்.

இக்கணங்கள் வந்து சூழும் யோகயாமளத்தினாள் மெய்க்கணங்க ளேவிரும்பு கோயில்யாம் விளம்புவாம். ' யாமள நூல் அறிந்து, அச்செய்திகளைத் தமிழ் நூல் களிற் பயன்படுத்திய புலவர் ஒட்டக்கூத்தர் ஒருவரே பாவர்.

இந்நூலின் முடிவில் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தரை வாழ்த்தும் முகமாகப் பாடல்கள் இரண்டு அமைந்துள்ளன.

ஆக்கம் பெருக்கு மடங்தை வாழியே

ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே கோக்குங் தமிழ்க்கொத் தனைத்தும் வாழியே கூத்தன் கவிச்சக்ர வர்த்தி வாழியே. வாழி தமிழ்ச்சொற் றெரிந்த நூற்றுறை

வாழி தமிழ்க்கொத் தனைத்து மார்க்கமும் வாழி திசைக்கப் புறத்து நாற்கவி

வாழி கவிச்சக் ரவர்த்தி கூத்தனே." மிகச் சிறப்புடைய கலிங்கத்துப்பரணிக்குப் பழைய உரை எதுவும் இல்லை; அடுத்துவந்த தக்கயாகப்பரணிக்கே உரை உண்டென்பது இந் நூலின் சிறப்புக்களில் ஒன்று' என்பர் அறிஞர் திரு. மு. அருணாசலம் அவர்கள். '

70. தக்கயாகப் பரணி, காடு பாடியது; 2, 3. 71. † : கோயிலைப் பாடியது: 1. 72. > → வாழ்த்து: 14, 15.

73. தமிழ் இலக்கிய வரலாறு; 12 ஆம் நூற்றாண்டு

பக் 413.