பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46

இதற்குக் காரணம், தக்கயாகப் பரணியில் - அமைந் துள்ள சைவ சமயச் சிறப்பின் திறமே எனலாம்.

3. தனிப் பாடல்கள்

ஒட்டக்கூத்தர் இயற்றியனவாகப் பல செய்யுட்கள் தனிப்பாடல் திரட்டிலும், தமிழ் நாவலர் சரிதையிலும் காணப்படுகின்றன. இனி, இவை குறித்து ஒரு சிறிது

காண்போம்.

விக்கிரம சோழனுடைய வீரத்தினைப் புகழ்ந்து இரண்டு பாடல்களை ஒட்டக்கூத்தர் பாடியுள்ளார். அவை வருமாறு:

இன்னம் கலிங்கத்து இகல்வேந்தர் உண்டென்றோ !

தென்னன் தமிழ்நாட்டைச் சீறியோ - சென்னி

அகளங்கா! உன்றன் அயிரா வதத்தின்

நிகளங்கால் விட்ட நினைவு

இப்பாடலில் விக்கிரமசோழனின் போர்ப்பெருமை குறிப்பிடப்படுகின்றது.

அன்றையிலும் இன்றைக் ககன்றதோ, அல்லாது குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டாயோ - என்றும் அடைந்தாரைத் தாங்கும் அகளங்கா! நீயும் * நடந்தாயோ நாலைந் தடி

இப்பாடலும் விக்கிரம சோழனின் சீற்றச் சிறப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கக் காணலாம்.

உலாப் பாடியபோது, பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்கப் பாடியது என்ற தலைப்பின் கீழ், தமிழ் நாவலர் சரிதையில் பின்வரும் பாடல் காணப் படுகின்றது: o

74. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு) : 126. 75. 5 * : 124.