பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49

என்றும் பாடியதாகப் பாடல்கள் தமிழ்நாவலர் சரிதையில் காணப்படுகின்றன. அரசி ஊடலாய்க் கதவடைத்துக் கொண்டிருந்த பொழுது இவர் மேற்கண்ட பாடலைப் பாட, அரசி சினந்தணியாளாய், கதவடைத்து ஒரு தாழ்ப் பாள் போட்டுக் கொண்டிருந்தவள் இரட்டைத் தாழ்ப் பாள் போட்டுக் கொண்டாள் என்றும், அன்றிலிருந்து * ஒட்டக்கூத்தர் பாடலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். என்ற மொழி நாட்டில் எழுந்தது என்றும் கூறுவர்.

ஒரு சமயம், அ ர ண் ம ைன ச் சமையற்காரன் அரசனுக்காகச் சமைத்த உணவில் கல்லும் மண்ணும் கலந் திருந்ததைக் கண்டு, அரசன் அடங்காச் சீற்றங்கொண்டு சமையற்காரனுக்குத் தண்டனை கொடுக்க முன்வந்த போது, ஒட்டக்கூத்தர் தலையிட்டுச் சமையற்காரன் பிழையினை அரசன் பொறுத்தருள வேண்டும் என்று கூறும் போக்கிற் பின்வரும் பாடலைப் பாடிச் சமையற்காரனை உய்யச் செய்தார் என்பர்.

மீனகம் பற்றிய வேலையும் மண்ணையும் வெற்படங்கப் போனகம் பற்றிய மாலலை யோ? பொருந் தாஅரசர் கானகம் பற்றக் கனவரை பற்றக் கலங்கல் பற்ற வானகம் பற்ற வடிவேல் விடுத்த மனதுங் கனே. ! மேலும், குலோத்துங்கன் போலவே இராசராசனும் ஒட்டக்கூத்தர் மாட்டுப் பேரன்பு செலுத்தினான் என்பது பின்வரும் நிகழ்ச்சியால் விளங்கும். ஒரு முறை அவைக் களத்தில் வீற்றிருந்த ஒட்டக்கூத்தர், அவை கலைந்தபோது தம் வயது முதிர்ச்சியின் காரணமாகத் தாம் அமர்ந்திருந்த இருக்கையினின்றும் எழுந்திருக்கச் சிறிது தொல்லைப்பட்ட நிலையில், அதுபோது அரியணையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த இராசராசன் இதனைக் கண்டுவிட்டு இரங்கி, ஒட்டக்கூத்தர் பெருமானுக்குக் கைகொடுத்து அவரை இருக்கையினின்றும் இறக்கி விட்டான் என்பர். அவன்

81. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு): 138