பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50

தன்மாட்டுக் காட்டிய பேரன்பாலும் பெருமதிப்பாலும் மனம் உருகிய ஒட்டக்கூத்தர் பின்வரும் பாடலைப் பாடினார்.

கொலையைத் தடவிய வைவேல் அரக்கர் குலம்மடியச் சிலையைத் தடவிய கையே யிது, செக தண்டத்துள்ள மலையைத் தடவிய விந்தத் தடவி மலைந்த ஒன்னார் தலையைத் தடவி நடக்குங் கொல் யானைச்

சயதுங்கனே** குலோத்துங்க சோழன் தில்லைக் கோவிந்தராசப் பெருமானைக் கடலில் துரக்கி எறிந்ததாக வரலாறு கூறும் . ஆனால் இராசராசன் அவ்வாறின் றிச் சமயப் பொறை மிகுந்தவன் என்பது விழுந்த அரிசமயத்தை மீள

எடுத்தான்' என்று அவன் மெய்க்கீர்த்தி குறிப்பிடு வதனின்றும் அறியலாம். மன்னன் அரியைப் பாட வேண்டும்’ என்று ஒட்டக்கூத்த ரை ஒரு ஞான்று கேட்ட தாகவும், அதுபோது பின்வரும் பாடலை அவர் பாடிய

தாகவும் தமிழ்நாவலர் சரிதை குறிப்பிடும்.

ஆரே யெனுமொன்று சொல்லத் தொடங்கினும்

அவ்விடத்துன் பேரே வரும் என்ன பேறுபெற் றேன் பெரு நான்மறையின் வேரே, மிதிலையின் மின்னுட னேவெய்ய கான் நடந்த காரே, கடல்கொளுங் தச்சிலை வாங்கிய காகுத்தனே. 88

சிவபெருமானிடம் ஒட்டக்கூத்தர் பெரும்பக்தி செலுத் தியவர் என்பது அவர் தி ரு .ெ ந. ய் த் தா ன த் து ச் சிவபெருமானைச் சேவித்த பொழுது பாடிய பாடலால் அறியப்படும்.

சோணாட்டில் திரிபுவனம் என்ற புவனை மாநகரில் வாழ்ந்த செல்வன் சோமன் என்பான் ஒட்டக்கூத்தரைப் புரந்த வள்ளல் ஆவன்.

82. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு) : 137 83. 5 : : 139

  • -