பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

52

விக்கா வுக்கா வித்தா விப்போய்

விட்டா னட்டார் சுட்டுர் புக்கார் இக்கா யத்தா சைப்பா டுற்றே

இற்றே டிப்போய் வைப்பீர் நிற்பீர் அக்காடப் பேய் தொக்கா டச்சூ

ழப்பா டத்தி வெப்பா டப்பூண் கெக்கா டக்கா னத்தா டப்போம்

நெய்த்தா னத்தா னைச்சே வித்தே. '

இப் பாட்டின் பொருள் வருமாறு:

விக்கித் தளர்ந்து உயிர் உடலை விட்டுப்போய் விட்டால், உறவினர் பிணத்தைத் தகனஞ் செய்துவிட்டு ஊர்க்குள் போய்விடுவர். இத்தகைய இயல்புடைய உடம்பில் பற்றுவைத்து, செல்வத்தைத் தேடிச் சம்பாதித்து வீட்டிற்கொண்டு வைக்கின்றவர்களே! தாம் அணிந் திருக்கும் எலும்பு மாலை அசையும் பேய்கள் ஒருங்குகூடிக் கூத்தாடவும், சடையிற் சூழ்ந்திருக்கும் கங்கையானது அசையவும், திருக்கைகளில் வைத்திருக்கும் வெப்பமான நெருப்பு அசையவும், அச் சுடுகாட்டினிடத்தில் நடனஞ். செய்கின்ற அந்தப் பெருமை பொருந்திய நெய்த்தான மென்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டு நிலையான கதியைப் பெறுவீராக."

இவ்வாறாகத் தனிப்பாடல்கள் பலவுள. இவை அனைத்தும் ஒட்டக்கூத்தரே பாடியவைதானா என்பதில் சிலர்க்கு ஐயப்பாடு உண்டு. ஆயினும் இலக்கியச் சுவை நோக்கி இவை இங்கே ஒரளவு சுருக்கமாகக் கூறப்பட்டன.

கதைகள்

ஒட்டக்கூத்தர் பல்வேறு சமயங்களில் பலரைப் பாராட்டித் தனிப் பாடல்கள் பாடியிருக்கலாம். அப் பாடல்கள் தனிப்பாடற்றிரட்டு, தனிச் செய்யுட்

87. தனிப்பாடல் திரட்டு; முதற்பாகம் : பாட்டு 61.