பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

53

சிந்தாமணி, தமிழ் நாவலர் சரிதை, விநோதரச மஞ்சரி, பெருந்தொகை ஆகிய நூல்களில் ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வெண்பா ஆகிய யாப்புகளில் காணப்படு கின்றன. இப் பாடல்களைக் கொண்டு கதைகள் பல கட்டி

யுள்ளனர். அவற்றில் Ε Γιάι) «АБ гг Gl) முரண்பட்டன. ஒட்டக்கூத்தர்-கம்பர் கதை, ஒட்டக்கூத்தர்-புகழேந்தி கதை என்பன பின்வந்தோரின் கற்பனைப் படைப்புகள். இக்

கதைகளில் ஒட்டக்கூத்தர், புகழேந்தி கதை விறுவிறுப்பும், சுவையும் மிக்கது. இப் பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு கூத்தரின் புலமைநலங் காண முற்படுதல் பொருந்தாச் செயலாகும்.

3. ஆய்வும் முடிவும்

1. ஒட்டக்கூத்தரின் பெயர்க்காரணம்

ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர் என்றும், அம்பலக்கூத்தர் என்றும், ஆனந்தக் கூத்தர் என்றும் குறிப்பர் ஒரு சாரார். ஒட்டக்கூத்தர் என்பதில் ஒட்ட என்பதனை வினையெச்சமாகக் கொண்டு ஒட்டுதல் என்ற பொருளும், ஒட்டம்' எனப் பெயராகக் கொண்டு பந்தயம்' என்ற பொருளும் அமைத்துக் கதைகள் பல புனையப்பட் டுள்ளதும் காணலாம். விக்கிரம சோழன் உலாவில் தாம் பாடிய ஒரு கண்ணியை ஒட்டிப் பாடியமையால் இப் பெயர் பெற்றார் என்றும், அரும்பைத் தொள்ளாயிரம் என்னும் நூலினை அரங்கேற்றிய பொழுது, அந்நூலில் உள்ள ஒரு செய்யுளைத் தனக்கு ஒட்டப் பாடும்படி விக்கிரம சோழன் சொல்ல, அவ்வாறே கூத்தர் பாடினமையால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறுவர். மேலும் புலவர் பலருடன் பந்தயம் வைத்துப் பாடிப் புகழ் பெற்ற காரணத்தால் ஒட்டக்கூத்தர் எனும்.பெயர் பெற்றார் என்றும் கூறுவோர் உண்டு.

டாக்டர் மு. வரதராசனார் அவர்களால் எழுதப் பெற்று அண்மையில் சாகித்திய அக்காதெமியினர் வெளி

ஒ. கூ-4