பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56

  • -.

3. ஒட்டக்கூத்தர் பொறுக்காத மனமும் புலமைக் காய்ச்சலும்

கொண்டவரா?

ஒட்டக்கூத்தர் பல்வேறு சமயங்களில் பலரைப் பாராட்டித் தனிப்பாடல்கள் பாடியிருக்கலாம். அப் பாடல்கள் தனிப்பாடல் திரட்டு, தனிச் செய்யுட்

சிந்தாமணி, தமிழ் நாவலர் சரிதை, விநோதரச மஞ்சரி, பெருந்தொகை ஆகிய நூல்களில் ஆசிரிய விருத்தம், கலி

விருத்தம், வெண்பா ஆகிய யாப்புக்களில் காணப்படு கின்றன. இப்பாடல்களைக் கொண்டு கதைகள் பல கட்டி யுள்ளனர். அவற்றில் பல கால முரண்பட்டன. ஒட்டக்

கூத்தர்-கம்பர் கதை, ஒட்டக்கூத்தர்.புகழேந்தி கதை என்பன பின்வந்தோரின் கற்பனைப் படைப்புகள் என்று உறுதியாக நிறுவலாம். இக்கதைகளில் ஒட்டக்கூத்தர். புகழேந்தி கதை விறுவிறுப்பும் சுவையும் மிக்கது. இப்பாடல் களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு கூத்தரின் புலமை நலங் காண முற்படுதல் பொருந்தாச் செயலாகும்.

புலவர் போட்டியும் பொறாமையும் இக்கால (ஒட்டக் கூத்தர் கால) இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு துரண்டுதலாக இருந்துள்ளது என்றும், இவர் காலத்துப் புலவர்களாகிய கம்பர், புகழேந்தி, ஒளவை முதலானோருடன் காழ்ப்புக் கொண்டு பூசலிழைத்துக் கொண்டே யிருந்திருக்கலாம் என்றும், சோழ மன்னர்க்குச் சமயப் பொறையில்லாதது போலவே இவர்க்கு (ஒட்டக்கூத்தருக்கு) புலமைப் பொறையும் இல்லாமை உணரப்படுகின்றது என்றும் அறிஞர் கருதுவர். "9

கல்வெட்டுப் புலமையும், நடுவுநிலை நெஞ்சும்,

ஆராய்ச்சி வித்தகமும் நிறைந்த அறிஞர் சதாசிவ பண்டாரத்தார் பின்வருமாறு எழுதியுள்ளார்:

90. டாக்டர் மு. கோவிந்தசாமி, இ ல க் கி ய த் தோற்றம் : பக். 133.