பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59

  • புன்மையும் வழுவும் நிறைந்த கவிகளால் தமிழிலக்கியத்தின் பொலிவழிக்கும் புன்கவிகளை ஒட்டக்கூத்தர் கண்ணோடாது ஒறுத்தது ஏனைப் புலவரெல்லார்க்கும் அவர் மேல் வெகுளியை விளைத்தது. அதனால் அவர்களும் அவர் வழி வந்தவர்களும் அவர்மேல் பொய்க் கதைகள் பல புனைந்து பரப்பினர். ஒட்டக்கூத்தர் அவர் .ெ ச ய் ைக க் கு அஞ் சாமல் இப்பாட்டைப் Lorriqiaorm rs. ****
  • -

'இப்பாட்டு, கூத்தர் செய்ததுதானா என்பது ஐயத்திற்கிட மானது' என்பர் அறிஞர் திரு. மு. அருணாசலம். .

அடுத்து, இது கவிஞரை வெட்டவேண்டாமென்று ஒட்டக்கூத்தரை நெற்குன்றவான முதலியார் பாடியது' என்ற கொளுவமைத்து தமிழ் நாவலர் சரிதையில் பின் வரும்பாடல் காணப்படுகின்றது.

கோக்கண்ட மன்னர் குரைகடற் புக் கிலர் கோ கனகப் பூக்கண்ட கொட்டியும் பூவா தொழிந்தில பூவில்

விண்ணோர் காக்கண்ட செங்கைக் கவிச்சக்ர வர்த்தியின்

கட்டுரையாம் பாக்கண் டொளிப்பர் களோகவி பாடிய பாவலரே."

புலவர்கள் பிழை பொறுக்கலாற்றாது அவர்கட்குத் தண்டனை தந்த ஒட்டக்கூத்தர், சோழவேந்தனது சமையற்காரர், ஒருமுறை சமைத்த உணவில் கல்லும் மண்ணும் கலந்திருக்கக் கண்டு, அதனைப் பொறாது சோழ மன்னன் அவனைத் தண்டஞ் செய்ய முற்பட்டபோது,

94. தமிழ் நாவலர் சரிதை; பாட்டு ; 129 உரை.

95. தமிழ் இலக்கிய வரலாறு; 12ஆம் நூற்றாண்டு:

பக். 351.

96. தமிழ் நாவலர் சரிதை; பாட்டு : 1.30.