பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60

அதனை விலக்கக் கீழ்க்காணும் பாடலைப் பாடியதாக அறிய வருகிறோம். -

மீனகம் பற்றிய வேலையு மண்ணையும் வெற்படங்கப் போனகம் பற்றிய மாலலை யோபொருங் தாவரசர் கானகம் பற்றக் கணவரை பற்றக் கலங்கல் பற்ற வானகம் பற்ற வடிவேல் விடுத்த மனதுங் கனே." இதனால் ஒட்டக்கூத்தரின் இரக்கவுள்ளம் இனிது புலப் படும். போலிப் புலமையைப் பாராட்டித் தமிழிற்குத் தலையிறக்கம் தாராமல் போலிப் புலவர்களைக் கடுமை யாகச் சாடி, உண்மைப் புலமையே உலவ வழிவகை செய்தார் ஒட்டக்கூத்தர் என்றே கொள்ளலாம். மேலும் தனிப்பாடல் திரட்டில் பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான் பாடியது" என்ற தலைப்பில் கீழ்க்காணும் பாடல் காணப்படுகின்றது.

குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டிய னிங்கில்லைக்

குறும்பியளவாக் காதைக் குடைந்துதோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை

இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப்போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தனில்லை =

விளையாட்டாக் கவிதைகளை விரைந்துபாடித் தெட்டுதற்கோ வறிவில்லாத் துரைகளுண்டு

தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே.”* i போலிப் புலவர்களைப் பற்றிப் பாடியது" என்ற தலைப்பில் இப்பாடல் அமைந்துள்ளது.

இப்பாடலில் போலிப் புலவர்களைக் கண்டித்துத் தண்டஞ் செய்பவர்களாகப் பிள்ளைப் பாண்டியனும், வில்லிபுத்துாரரும், ஒட்டக்கூத்தரும் ஆகிய மூவர் குறிப்பிடப் பெறுகின்றனர். இதனால் ஒட்டக்கூத்தர் பொறாத மனங்கொண்டு புலவர்களை யொறுத்து வந்தார்

-

97. தமிழ் நாவலர் சரிதை; பாட்டு : 1.38. 98. தனிப்பாடற்றிரட்டு; முதற் பாகம் : பக். 233.