பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

6]

என்பது பிழை; போலிப் புலவர் மாட்டே கடுமையாக இருந்தார் என்பது வெளிப்படை. சமையற்காரனைத் தண்டத்திலிருந்து தப்புவித்த நன்மனம் ஒட்டக்கூத்த

ருடையது.

மேலும் சோழ மன்னர்கள் பலர் சமயப் பொறை வாய்ந்தவர்கள். முதலாம் இராசராசன் நாகப்பட்டினத்தில் பெளத்த விகாரம்-சூடாமணி விகாரம் ஒன்று எழுப்பினான். இரண்டாம் குலோத்துங்கன் மட்டுமே சமயப் பொறை அ ற் ற வ னாக க் காணப்படுகின்றான். அந்நிலைக்கும் காரணம் அவன் காலச் சமயச் சூழ்நிலையே என்பர். இரண்டாம் இராசராசன் விழுந்த அரி சமயத்தை மீள எடுத்தான் என்று அவனுடைய மெய்க்கீர்த்தி கூறுவதோடு, ஒட்டக்கூத்தரை அரியைப் பாடுமாறு கேட்க, அவரும் அவ்வாறே திருமாலைச் சிறப்பித்து ஒரு பாடல்?’ பாடினார் என்பதும் விளங்குகின்றன.

எனவே, அறிஞர் திரு. தி. வை. சதாசிவப் பண்டாரத் தார் அவர்களின் கீழ்க் காணும் கருத்தே ஒட்டக்கூத்தர் நன்னெஞ்சம் சான்ற நல்லவர் என்பதனைப் புலப்படுத்தும் சான்றாக அமையும்:

  • இவர் இரு வேறுலகத்தியற்கைக்கு முரணாகத் திருமகள், கலைமகள் ஆகிய இருவரது திருவருட் பேற்றிற்கும் உரியவராகப் பெருஞ் செல்வமும் அருங் கல்வியும் எய்திச் சிறந்து வாழ்ந்தவர். செய்ந் நன்றியறிதல், பிற புலவர் பெருமக்களை உளம் உவந்து பாராட்டுதல் மாணாக்கர்கட்குப் பாடஞ் சொல்லி அன்னாரை நல்வழிப்படுத்துதல் ஆகிய உயர்ந்த குணங்கள் இவர் பால் நன்கு அமைந் திருந்தன என்பதற்குப் பல எடுத்துக்காட்டுக்கள் 5 6утбт эът. " " 10 0

99. தமிழ் நாவலர் சரிதை . 139.

100. கலைக்களஞ்சியம்; இரண்டாந் தொகுதி;

பக். 654.