பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62

4. ஒட்டக்கூத்தர் ஈட்டி எழுபது என்னும் நூலைப்

பாடினாரா?

அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், அவர் (ஒட்டக்கூத்தர்) அம்மரபின் (செங்குந்தர் மரபு) பெருமை விளங்க ஈட்டியெழுபது என்னும் நூலினைப் பாடியுள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர். மு. இராகவையங்கார் அவர்கள்,

இப்புலவர் (ஒட்டக்கூத்தர்) பாடிய நூல் களிலே ஈட்டியெழுபது என்பதும் ஒன்று. இஃது இவரது குலப் பெருமைகளையெல்லாம் கம்பீர மாக விளக்குவது.' என்று குறிப்பிடுவர். 192

அறிஞர் திரு. மு. அருணாசலம் அவர்கள் இது (ஈட்டி எழுபது) ஒட்டக்கூத்தர் செய்ததன்று என்பர்.

ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி பாடிய பின்பே ஈட்டியெழுபது பாடியவர் என்பது,

எந்தையா யம்மைபாகத் திறைவனை வணங்கியாமே பைந்தமிழ்ப் பரணிசெய்த பாடலோடு என்னும் ஈட்டிஎழுபதுத் (பாடல் 63) தொடரால் அறியப்படும்.

எனவே, தாம் பிறந்த செங்குந்தர் குலச் சிறப்பு விளங்க ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது பாடினார் எனலாம்.

101. இலக்கிய வரலாறு; பக்கங்கள் 372.

102. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு; பிரபந்த

ஆராய்ச்சியுரை.

103. தமிழ் இலக்கிய வரலாறு 12 ஆம் நூற்றாண்டு;

பக். 435. -