பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63

5. ஒட்டக்கூத்தர் உத்தர ராமாயணம் பாடினாரா?

இராமாயண உத்தரகாண்டம் இவர் (ஒட்டக்கூத்தர்)

எழுதியதாகக் கூறப்படுவதனை ஏற்கத் தடையுள்ளது'

என்பர் டாக்டர் மு. கோவிந்தசாமி அவர்கள். *

அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் பின்வருமாறு: கூறுகின்றார்:

இங்கு நாம் பார்க்கவேண்டுவது, கூத்தர் உத்தரகாண்டம் பா டி ன ா ர் என்பதற்குரிய சான்று: நெடுங்காலமாக வழங்கி வரும் வழக்கு இவர் பாடினாரென்பது. தாம் இளைஞராயிருந்த பொழுது ஒரு பேரிலக்கியம் L / TT L_ இவர் எண்ணினார். இராமாயணம் ஞாபகம் வந்தது. அதன்மேல், முன்னமே கம்பர் இராமாயணத்தைப் பாடி முடித்திருந்தமையால் அவர் பாடாது விட்ட உத்தரகாண்டப் பகுதியை மட்டும் தாம் பாடி முடித்தார் என்று கருதுவது பொருந்தும். '" ஆயினும் ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் பாடினார் என்றோ பாடவில்லை என்றோ கொள்வதற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. நெடுங்காலமாக வழங்கி வரும் வழக்கால் ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் பாடினார் என்று கொள்ளலாம். அவ்வளவே! தகுந்த சான்றுகள் மேற்கொண்டு கிடைக்கும்வரை இக் கருத்தினையே வைத்துக் கொள்ளலாம்.

6. கோவை யுலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்' என்னும்

கூற்று எங்த அளவிற்குப் பொருத்தமுடைத்து?

ஒட்டக்கூத்தர் 'நாலாயிரக் கோவை' என்றொரு நூல் செய்ததாகச் சோழமண்டல சதகம் கூறும்:

104. இலக்கியத் தோற்றம் பக். 182. 105. தமிழ் இலக்கிய வரலாறு; 12 ஆம் நூற்றாண்டு,

பக். 415, 416.