பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68

பெதும்பை மிக்க நாணமுடையவள் என்று கூறாது வானத்தில் தோன்றும் மின்னலினது துவளுதலைவானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் என்று கூறு கின்றார்.

£ ę திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின்

பெருவிருந்து பேணுங் குழலாள்.' -விக்கிரம: 240

இவ்வடிகளில் அரிவையை அறிமுகப்படுத்தும்போது, பெருவிருந்து பேணுங்குழலாள்" என்று நயமாகக் கூறு கிறார். அவள் கேசத்தில் மலர்கள் விளங்கியதால் வண்டு களுக்கு விருந்தளிக்கும் கூந்தலையுடையவள் என்று கூறுகிறார்.

ஒரு பேரிளம்பெண்ணின் செய்கையை அழகாகக் கூறு கிறார். பின்வரும் அடிகளின் மூலம் புலவரின் கற்பனை யாற்றல் எல்லையைக் கடந்துவிட்டதென்றே கூறலாம்.

-செம்மை நிறையும் அழகால் நிகரழித்துச் செய்யாள் உறையும் மலர்பறிப்பாள் ஒப்பாள்.

-விக்கிரம ; 309

அந்தப் பேரிளம்பெண் தன் சிவந்த கரத்தினால் தனக்கு நிகரான கமலத்தைக் கொய்தாளாம். அக்காட்சி எவ்வாறிருந்தது என்பதை நயத்துடன் இவ்வடிகள் கூறு கின்றன. தாமரையை அவள் கொய்தது தன்னிடம் எழிலிலும் தன்மையிலும் தோல்வியடைந்ந திருமகள் வீற்றிருக்கும் இடத்தைக் கைக்கொள்வது போல் இருந்த தாம். என்ன ஒப்பற்ற கற்பனை !

கூத்தரின் உவமைகள்

உவமை என்பது கவிஞரின் அனுபவ ஆற்றலையும், அறிவு முதிர்ச்சியையும் காட்டுவது. ஒட்டக்கூத்தரின்