பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

69

உவமைகள் அவருடைய துண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகின்றன.

  • அரியன கித்திலத்தின் அம்பொற் றொடித்தோள்

பரியன காம்பிற் பணைத்தும்

-விக்கிரம 175

முத்தினாலாகிய வளையை அணிந்த தோளை மூங்கி லுக்கு ஒப்பிடுகிறார். மூங்கிலும் முத்து பிறக்கும் இடங் களில் ஒன்றாதலின் அதை ஓர் ஏற்றப் பொருளாக எண்ணி முத்துக்கள் விளங்கும் தோளுக்கு உவமை யாக்கிக் கூறியுள்ளார்.

-திருமார்பிற் கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள் பாற்கடல் போர்த்த தெனப்பரப்பி.”

-குலோத்துங்க : 68

கரிய நிறத்தை உடைய குலோத்துங்கனின் மார்பிற்குக் கார்க் கடலும், தோளின் மீது அணியப்பட்ட முத்து மாலை களுக்குப் பாற்கடலும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. இரு கடல்களையும் ஒருங்கே சேர்த்து விடுகிறார் கவிஞர்.

மேற்காட்டிய இலக்கிய எடுத்துக்காட்டுகளால் ஒட்டக் கூத்தர் உலாப்பாடுதலில் இலக்கிய உலகில் தலைசிறந்த இடத்தினை வகிக்கின்றார் என்பது தாமே போதரும்.

ஒட்டக்கூத்தர் பாடியதாக அந்தாதி ஏதும் நமக்கு இன்று கிடைத்திலது. இவர் பாடிய அந்தாதி, இவர் பாடிய வேறு சில நூல்கள் இன்று கிடைக்காமற் போனமை போன்றே இருந்து பிற்காலத்தே வழக்கு வீழ்ந்திருக்கலாம்.

இவர் பாடிய மூவருலா கொண்டே இவர் புலமை நயத்தினை வியந்து பாராட்டலாம். எனவே கோவை உலா அந்தாதிக்கொரு ஒட்டக்கூத்தன்' என்ற புகழுரை பொருளுடை யதேயாகும்.

ஒ. கூ-5