பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71

திருஞானசம்பந்தரிடம் ஈடுபாடு

ஒட்டக்கூத்தர் கைக்கோளார் என்று கூறப்படும் செங்குந்தர் மரபில் தோன்றியவர். சைவ சமயத்தவர் ; சக்தி வழிபாட்டில் நாட்டம் மிக்கவர் ; தம் நூல்களில் திருமாலைப் பற்றிய பெருமைகளைக் கூறி வணங்குதலால், சமயப் பொதுமை உடையவர் என்று இவரைக் கருதலாம். ஆயினும் கூத்தர் சிறந்த முருகபக்தர். தக்கயாகப் பரணி யில் கோயில் பாடியது என்ற பகுதியில் திருஞானசம்பந்தர் வரலாறு காணப்படுகின்றது. இங்கே திருஞானசம்பந்தரை முருகப் பெருமானாகவே கூத்தர் காட்டுகின்றார். காளி தேவி, கோயிலில் வீற்றிருக்கின்றாள் ; அப்போது கலை Ι ΓΙ ΑΕ 5ζΙ ΕΥΤ அழைத்துச் சம்பந்தர் சமணரை வென்ற வரலாற்றைக் கூறு மாறு கட்டளை யிடுகின்றாள். அவ் வாறே கலை மகளும் சம்பந்தர் வரலாற்றினைக் கூறுவ தாகக் கூத்தர் பாடுகின்றார்.

தக்கயாகப் பர னி பாடுவதற்கு இவ்வாறு பலவாறான காரணங்கள் ஒட்டக்கூத்தருக்கு இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம்.

8. ஒட்டக்கூத்தர் நூல்களிற் சில வழக்கு வீழ்ந்தமைக்குரிய

காரணங்கள்

ஒட்டக்கூத்தர் செய்யுட்கள் மிடுக்குநடை வாய்ந்தன ; எளிதிற் பொருள் அறியமுடியாதன ; வடமொழிச் சொற்கள் விரவி நிற்பன என்பர் பேராசிரியர் ஏசுதாசன் அவர்கள். 108

106. Prof. C. Jesudasan and Hephzibah Jesudasan,

History of Tamil Literature :

    • Ottakkuttar's style certainly arrests by its Miltonic tread...... The poet maintains a stately and dignified style, inclining to hardness rather than softness---—For Ottakkuttan’s Tamil is a