பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

73

போற்றி நூல்கள் இயற்றினார். வாழ்வின் உணர்ச்சிகள் உந்த நூல்கள் இயற்றும் வாய்ப்பு அவர்க்கு இல்லை. ஆதலின், மக்களால் கவிச் சக்கரவர்த்தி எனப் போற்றப்பட்ட கம்பரின் நூல் எய்திய சிறப்பை ஒட்டக்கூத்தரின் நூல்கள் பெற (ԼՔԼԳ. யவில்லை. செய்யுள்கள், வருணனைகள் மிகுந்தனவாய்ச் செறிவு உடையனவாய் இருந்த போதிலும், அவற்றின் நடையில் இயல்பான ஒட்டம் அமையவில்லை. அவருடைய வாழ்வில் இருந்த பெருமிதமும் கடுமையும் அவர் இயற்றிய செய்யுள்களிலும் அமைந்தன ; உள்ளத்து உணர் வின் செம்மையும் இனிமையும் படியவில்லை.

9. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒட்டக்கூத்தர் பெறும் இடம்

முதலாவதாக, ஒட்டக்கூத்தர் பிள்ளைத் தமிழ்' என்னும் பிரபந்த வகையினை விளங்கச் செய்யும் போக்கில் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலினைப் பாடினார். பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக எண்ணிப் பாடிய பாடல்களை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் காணலாம். ஆனாலும் பிள்ளைத்தமிழ்' என்றோர் இலக்கிய வகைக்கு இலக்கிய வடிவத்தினை முதற்கண் தந்தவர் ஒட்டக்கூத்தரே ஆவர்.

இரண்டாவதாக, ஒடடக்கூத்தர் பற்றி நாம் சிறப்பாகக் குறிக்கத்தக்க செய்தி, அவர் தாம் பாடியுள்ள நூல்களில் அரிய வரலாற்றுச் செய்திகள் பலவற்றினை ஆங்காங்கே பொதிந்து தந்துள்ள பெருஞ் சிறப்பாகும். சங்ககாலப் புலவரான பரணர் போன்றே ஒட்டத்கூத்தர் வரலாற் றுணர்வு வாய்ந்த புலவராகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்து மிளிர்கின்றார். இவ்வுண்மையினை அறிஞர் தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச்

==

108. தமிழ் இலக்கிய வரலாறு : ப. 258