பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

பின்னிணைப்பு

டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் தக்கயாகப் பரணி பற்றி ஆய்ந்துரைக்கும் சில ஆராய்ச்சியுண்மைகள்செய்திகள் இவண் தரப்பட்டுள்ளன. இச் செய்திகள் ஆராய்ச்சி உலகிற்குக் கிடைத்துள்ள நல்விருந்தாயின மையின் அவற்றுள் சில பகுதிகள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

1. பிற பரணி நூல்களுக்கும் தக்கயாகப் பரணிக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்

I

H

மற்றப் பரணிகளைப் போலப் பா ட் டு ைட த் தலைவனுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்று வாழ்த்தாமல், ஆக்குவித்தோனுக்கு நன்மை உண் டாகும்படி தெய்வங்களை வாழ்த்தியிருத்தல்.

2. உமாபாகர், விநாயகர், முருகக் கடவுள், திருஞான சம்பந்தரென்னும் இவர்களை மட்டும் வாழ்த்தி யிருத்தல்.

3. நூலுறுப்புகளின் பிறழ்ச்சி.

4. காடு பாடியது முதலியவற்றில் யாமள நூலின் முறைப்

படி வருணித்திருத்தல்.