பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          மக்களுக் கன்றி நாளும்
          மெளனமாய் ஒன்றி நிற்கும்
          கொக்குக்கும், நண்டு நாரை
          குருவிக்கும், நீர்ப்பாம் புக்கும்,
          ஒக்கத்தன் னுடனே வாழும்
          உறவினங் கட்கும் தின்னச்
          சிக்கிய மீனோ ஏழை
          சேர்த்திடும் கூலிக் காசும்!

          'தனதுதான்’ என்னும் கெட்ட
          தன்னலம் உலகில் மிக்கு,
          மனிதர் தாம் மனிதத் தன்மை
          மாட்சிமை குன்றி மாயப்
          புனிதமாம் வாய்மை தூய்மை
          பொருளற்றுப் போயிற் றேயோ'
          எனநினைத் தெண்ணி ஏங்கி
          இரங்கிநின் றிருந்தான் முன்னே,

          நாகப்பன் சிவகிரிக்கு அழைத்தல்
          கன்றுகா லிகளும் உள்ளோன்,
          காடுள்ளோன், காசும் உள்ளோன்,
          நன்றென்ப தொன்று மட்டும்
          நனியில்லோன் நாகப் பன்தான்
          அன்றுவர் தருகில் நின்றே
          அங்கையைக் கூப்பி, "ஐயா!
          சென்றுநாம் வரலாம், வாரும்
          சிவகிரிக்" கென்ற ழைத்தான்.

9