பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எட்டு

நாகப்பன் கவிஞனுடன் தம்பியின் வீட்டிற்குச் செல்லல்


நாகப்பன் கூர்ந்து கேட்டான்;
நாணி,நா வாடான்; நெஞ்சம்
வேகப்ப னாகி, 'எல்லாம்
விதிப்படி முடிக’ என்றே
ஏகப்பின் தொடர லானான்;
இதைக் கண்ட கவிஞ னும்முன்
னாகப்பன் நினைவும் தோன்ற
நகைத்துடன் நடப்போ னானான்.

நந்தன் சாந்தியின் வரவேற்பு


'எமைஒப்பார் இலையிங்' கென்னும்
இறுமாப்பை எறிந்து விட்டுத்
தமைகாடிக் கவிஞ னோடும்
தமயனும் வருதல் கண்டு,
'சுமையான பகைமை முற்றும்
தொலைந்ததின் றோடிங்' கென்றே
அமைதியாய் எழுந்து கந்தன்,
"அண்ணா!வா ருங்கள்," என்றான்.

103