பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மிகைசெய்து மெலிந்தோர் நெஞ்சை
மிகமிக நோகச் செய்து,
பகைசெய்து வாழ்நா ளெல்லாம்
பணம்செய்து வாழ்ந்த தன்றி,
நகைசெய்தல் அறியா நாகப்
பன்வரக் கண்ட நங்கை
முகைசெய்த முறுவல் பூத்தே
மூத்தார்க்கு வணக்கம் செய்தாள்.


பக்கம் தன் மனைவி சாந்தி
பதுமைபோல் நிற்க, நந்தன்
மிக்ககத் தன்பு தோன்ற,
மென்மையும் குரலில் தோன்ற,
மக்களின் நலத்தைக் கேட்டான்;
மதனியின் சுகத்தைக் கேட்டான்;
ஒக்கத்தன் னுடன்பி றந்தோன்
உளம்நனி கனியு மாறே!


நாகப்பனின் கழிவிரக்கம்


குற்றந்தான் புரிந்த நெஞ்சு
குறுகுறுப் புற்ற தேனும்,
மற்றுந்தான் செய்வ தற்று
மனம்மாறி நாகப் பன்தான்
"சுற்றர் தான் சூழ வாழும்
சுகம் இன்று கண்டேன், தம்பி!
செற்றந்தான் நமக்குள் வேண்டாம்
சேர்ந்தினி வாழ்வோம்," என்றான்.

104