பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாகப்பன் நாணுதலும் ஈகையும்

கந்தனின் மொழிகள் கேட்டு
நாகப்பன் நனியும் நாணி,
'சிந்தனை எனது நெஞ்சேன்
செயவில்லை இதுபோல்’ என்றே
நொந்தனன், எனினும் தன்னை
கொடியினில் மாற்றிக் கொண்டு,
"சொந்தஎன் பாதிச் சொத்துன்
சொல்நம்பித் தந்தேன்," என்றான்.

கவிஞனின் மகிழ்ச்சி

தம்பலம் மென்ற வாறே
தக்கசொல் கவிஞன் கேட்டான்.
"அம் புவி உள்ள காறும்
அழியாத புகழ்பெற் றீர்கள்;
'தம்பிக்குத் தமயன் என்றும்
தரணியில் இளைக்கான்' என்று
நம்பும்இச் சொல்லுக் கானீர்
நல்லமேற் கோள்நீர், என்றான்.

மனித வாழ்க்கையைத் தாழ்த்தும்
மூன்று கேடுகள்

"வான்று எளி வீழ்ந்தே இந்த
வையகம் வளமுற் றாலும்,
மூன்றுகே டு களால் மக்கள்
முற்றிலும் கெடுவர், என்று
சான்றவர் வாழ்ந்து கெட்டுச்
சாற்றினர் அன்றே! இன்றும்
ஊன்றியா ராய்ந்தால் அச்சொல்
உண்மையென் றுணர்வோம் நாமும்

107