பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்லாமை என்னும் சொல்லை
இதயத்தில் உறுதி உள்ளோர்
சொல்லாமை இயல்பே; மற்றிச்
சோம்பேறிச் சோர்வுற் றோர்கள்,
ஒல்லாமை ஏது வாய்த்தம்
உதிரத்தில் உதித்த மக்கள்
கல்லாமை யாகப் பேனும்
காரணம் முதலாம் கேடு!

அரியால் அறத்தைப் பேணி
ஆக்கத்தை அளித்தார் முன்;பின்
உரியவர் நொந்து வந்தால்
உதவுவர் குறியாப் பாக!
பரியினும் இரங்கா தின்று
பணத்திற்கு வட்டி வாங்கும்
பெரியஇப் பிழையால் நாட்டில்
பிறந்தது இரண்டாம் கேடு!

சீலமும், தொழிலை ஆய்ந்து
செய்கின்ற திறமில் லோராய்க்
காலமும் பொருளும் ஆற்றில்
கரைத்தநற் காய மாக்கி,
ஓலமும் உலைவும் சேர்க்கும்
உருவழி பாட்டால் இந்த
ஞாலமும் தொடர்ந்து சால
நலிவுறல் மூன்றாம் கேடு!

109