பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றிது தீதி தென்றே
நன்றாக அறிந்தோ னாயும்,
அன்றவன் செய்த அந்த
அநியாய மான நூலைச்
சென்றநாள் அனைத்தும் மன்னர்
செலுத்தினர் ஆணை; கண்டீர்!
இன்றள வுள்ள தீமைக்
கேதிது,” என்றான், நல்லோன்.


நாகப்பன் தன் இல்லம் ஏகுதல்

கண்ணினில் காணா உண்மை
கவிஞனின் வாய்ச்சொல் லாக
அண்ணனும் தம்பியும் கூர்ந்
தமைதியாய்க் கேட்டா ராய்ந்தே,
"எண்ணமொன் றினிவே றில்லை;
ஈந்தனன் பொருளை இன்றே!
திண்ணமிச் சொல்என் றன்று
திருந்தினேன் ஆகிச் சென்றான்.


சாந்தி நந்தன் சஞ்சலம்

கூட்டினில் கிளியாய் நொந்து
குலைந்துதம் வாழ்வு குன்றி,
நாட்டினில் பாடு பட்டோர்
நலிந்திடக் கெளடில் யன்தான்
வீட்டினில் இருந்தே நன்றாய்
வேதியர் உண்ணும் மார்க்கம்
ஏட்டினில் சட்ட மாக
எழுதினான் எனவும் கேட்டே,

110