பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கள்ளமில் லாத சிந்தைக்
கன்னிகை புவனம், சாந்தி,
வள்ளியம் மாளும் அங்கே
வயணமாய் அமர்ந்து கேட்கப்
பள்ளியைப் பற்றி எல்லாம்
பரபரப் பின்றிப் பேசித்
தெள்ளவும் தெரிந்து யாவும்
தெளிவாக்கிக் கொள்ள லானர்.

நாகப்பன் நல்லுரை

"ஈண்டிந்த நாளைப் போலும்
இனியநாள் ஒன்றில் லாமல்
ஆண்டைந்து வந்து போயிற்
றனைவரும் பிரிந்த தன்பின்;
மீண்டும் நாம் கூடி வாழ்ந்தால்
மிகநன்றாய், இருக்கும்" என்றே
வேண்டிாநா கப்பன் எண்ணி
விளம்பினான் விருப்ப மாக!

கவிஞனின் கருத்துரை

தனியொரு மனித னேனும்
தரித்திரத் தோடிவ் வூரில்
இனியிருப் பதற்கு யாதும்
ஏதில்லை எனவே எண்ணி,
துனியறுந் திதயம் மெத்தத்
துலங்கிட உவகை எய்தி
நனியிருந் தினைய சொன்னான்
நயமுடன் கவிஞன் நாடி!

114