பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'என்மக்கள் உன்மக் கள்மற்.
றிவனவன் மக்க ளோடு
மன்மக்கள் எனினும்- எல்லா
மக்களும் மக்க ளேனும்,
நன்மக்க ளாகி வாழும்
நல்லவூ ரன்றி, நாட்டில்
புன்மக்க ளாகி வாழும்
பொல்லாவூர் நரகம் கண்டீர்!

"நாயென்ன, "நரிதான்' என்ன,
"நலிவிக்கும் பன்றி என்ன,
நோயென்ன- நொந்த மக்கள்
நுவலாது நுண்ணுா லாய்ந்தே,
"தாயெ’ன்னத் தந்தை” என்னத்
தகும்படி இருந்திவ் வூர்நம்
சேயென்னக் காத்து வாழ்ந்தால்
சேரியும் சொர்க்க மாகும்!

மடல்செறி வாழை, தென்னே,
மா,பலா மரங்கள் போல
மிடல்செறி மனித ராகி
மேதினி மீதில் ஒங்கி,
அடல்செறி யாது கூடி
அரும்பயன் பயப்ப வாழின்
கடல்செறி ஞால மெல்லாம்
கைகூப்பி வணங்கக் காண்பீர்!

115