பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுயநலம் ஒன்றை மட்டும்
சுத்தமாய் மறந்து விட்டால்
இயநலம் பெறுவோம்: நல்ல
எழில்நலம் பெறுவோம்; ஏத்தப்
புயநலம் பெறுவோம்; மேலும்
புகழ்நலம் பெறுவோம்; என்றும்
சுயலம் பெறுவோம் இந்தச்
சகநலம் பெறவே, என்றான்.

வந்தவர் மகிழ்வுடன் செல்லுதல்
இன்றுதான் நமது வாழ்வே
இனிமையா யிற்றென் றோர்ந்து,
'நன்றுதான்’ என்று பின்பு
நல்விருகந், துண்டெ ழுந்தே,
"சென்றுதான் வருவோம்" என்று
செப்பவும், சிரித்துக் கூட
நின்றுதான் அனுப்பி வைத்தார்
நெகிழ்ந்திட நெஞ்செல் லோர்க்கும்.

116