பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒன்பது


துளசி உழைத்து உயர்தல்
பண்ணுடன் கலந்த பாடல்
பரவசப் படுத்து தல்போல்,
புண்ணுடன் கலந்த நோயைப்
போக்கிடும் புலவன் சொல்லோர்ந்,
தெண்ணுடன் கலந்த ழைத்தாள்
ஏழையத் துளசி நாளும்
மண்ணுடன் கலந்த நீரால்
மகத்தான பொருளுண் டாக்க!


கொண்டதன் நிலத்தைக் கொத்திக்
குழியிட்டுக் குப்பை யிட்டு,
வெண்டையை நட்டுத் தண்ணீர்
விரும்பியே விட்டுப் பேண,
கண்டவர் களித்தார் நீண்ட
காய்களின் வளத்தை; வாங்கி
உண்டவர் விண்டார், சென்ற
ஊர்தொறும் உவந்தோ ராகி!

117