பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'எங்கிலும் கண்டோ மில்லை,
இதுமிகப் புதுமை' யென்றே
கங்குலும் பகலும் ஊரே
களிப்புடன் கலந்து பேச,
அங்குலம் குறைவில் லாமல்
ஆறடி நீளம் நீண்டு
தொங்கிய புடலங் காயால்
துளசிதன் துயரம் தீர்ந்தாள்.

நீருக்கும் நிலத்துக் கும்தான்
நேர்ந்ததோர் பொருத்தத் தாலோ
வேருக்குக் கிடைத்த கோழிக்
கழிவுரம் விருந்தா யிற்றோ,
பாருக்குள் முளேத்து நீண்டப்
பக்தலில் படர்ந்து காய்த்த
யாருக்கும் பிரிய மான
அவரைக்காய்க் களவே காணோம்!

முருங்கை,வா ழைக்காய், கோழி,
முட்டைகள், குஞ்சு, சேவல்-
ஒருங்குவிற் றொருவா ரத்துக்
கொருநூறு ரூபாய் சேர்த்தாள்.
மருங்கிலுள் ளோர்க ளெல்லாம்
மனங்கொண்டு கண்டோ ராகி
அரங்கத்தில் இரங்க லானார்,
அனைவரும் அவள்போ லாக!

118