பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேற்றுாராரின் ஆற்றாமை
'பாட்டினில் வல்ல அந்தப்
பாவலன் சொல்லைக் கேட்டு
வீட்டினில் இருந்த செல்வம்
வெளியிலே இறைத்து வீணாய்
நாட்டினில் வேலைக் கார
நாய்களைக் கிள்ளி விட்டுக்
கேட்டினில் சாவான் இன்று
கிளர்ந்தெழச் செய்தான்,' என்றே.

சொந்தமும் பந்த மென்னும்
சொல்லெதூம் குறுக்கி டாமல்
நந்தனை ஒழிக்கா தோராய்
நாமினி இருந்தோ மாயின்,
இந்தமா நிலத்தில் வாழ்வே
இல்லை’யென் றிதயம் மெத்த
நொந்தவ ரானார், என்றும்
நோகாமல் இருந்து வாழ்வார்.

'சந்திரன் உண்டவ் விண்ணில்,
சாமிகள் உண்டிம் மண்ணில்;
மந்திரி யுண்டு; மற்றும்
மறைவல்லார் உண்டிந் நாட்டில்
நொந்திர வும்ப கல்தான்
நூறாறு பேர்கள் கூடித்
தொந்தர வேன்செய் கின்றார்
தொடர்ந்'தென்றார் பேரூர் வாழ்வார்.

124