பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"நயனிலா மனித னாகி
நாடொறும் நல்ல துண்டும்
பயனிலா திருந்து வாழும்
பல்லாண்டு வாழ்வு வேண்டாம்;
வெயினிலா வெனவே எங்கும்
விளங்கியின் புறுத்தி நாட்டில்
வியனுலா விடவே வாழ்ந்து
வீதலே கருமம்' என்றான்.

நந்தன், சாந்தியின் மனக்குறை உணர்தல்
உள்ளமுங் கவலை யின்றி
உன்னிப்பாய் நத்தன் கேட்டும்
விள்ளவும் சொல்லில் லாமல்
விரைந்தெழுந் தருகில் கட்டும்
பள்ளியின் பக்கம் செய்யப்
படும்வினை பார்த்து வந்தே
கொள்ளவும் உணவு, சாந்தி
கொடுத்தவெற் றிலையை மென்றான்.

இனிக்கின்ற மாலை கேரம்
இதயத்தில் இன்பம் பொங்க,
“உனக்கின்று மனமுண் டாயின்
ஒருமித்தாங் கிருவ ரும்நாம்
முனிக்குன்று சென்று மீள
முயலலாம்,” எனவே நந்தன்,
“எனக்கின்று தரஅங் கென்ன
இருக்கின்ற” தென்றாள், சாக்தி.

126