பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்தந்தை தேடித் தந்த
தனத்தைத்தா ராள மாயுன்
வாய்தந்த வார்த்தை நம்பி
வருந்தினோர்க் கீக்தேன்; வாழ்வில்
சேய்தந்த திருவே! என்றன்
சிந்தைக்குப் பழுவுண் டாக
நோய்தந்த வாறென் னென்று
நுவலுக! என்றான் நந்தன்.


சற்றிருந் துரைத்தாள் மெல்லச்
சாந்தியும் : சகத்தில் உள்ள
மற்றவர் குறையைக் கண்ட
மறுகணம் தீர்க்க வல்லீர்!
உற்றவர் குறையை மட்டும்
உளங்கொண்டு காணீர்! ஆயின்
எற்றுநும் திறனும் அன்பும்
என்மீதில் இருந்த தென்றாள்.


குருநாளும் அதுவு மாகக்
குறிப்பறி விப்பொன் றின்றி
ஒருநாளும் இல்லா வாறின்
றுனக்கெனத் தனியாய் வந்த
திருநாளும் இதுவோ?’' என்று
சிரித்தனன் நந்தன்! ஆமாம்,
வருநாளும் திருநா ளாக
வரக்கூடும்'’ என்றாள் சாந்தி.

127