பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனத்திலே வைத்துக் கொண்டு
மறுகுவை யாயின், மாதர்
இனத்திலே ஒருத்தி நீயும்
என்றெனை எண்ணச் செய்வாய்.
புனத்திலே திரியும் நல்ல
புள்ளிமான் போல்வாய்! மேலும்
சினத்திலே இருத்தி என்னைச்
சிவனாக்க வேண்டாம், என்றான்.


நன்றெனல் வேண்டும் கேட்டு;
நகையுறின் நாணம் கொல்லும்;
அன்றெனில் சொல்லேன், என்றாள்.
'ஆகஅவ் விதமே', என்ன,
முன்றிலில் சென்று நின்றேன்,
மோகனக் குயிலும் மற்றத்
தென்றலும் வென்ற தென்னைத்
தெளிந்திலேன் சிந்தை,” என்றாள்.


புன்னகை புரிந்து மேலும்
புகலுவாள் கடைக்க ணத்து:
பொன்னகை வேண்டேன்; பட்டுப்
புடவைகள் வேண்டேன்; சென்றக்
கன்னிகை புவனநம் தன்னைக்
கண்டநாள் முதல்நம் சொந்த
இன்னகை அணிய ஆவல்
இதயமும் கொண்ட தென்றாள்.

128