பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"பருமர மாகச் சாலப்
பருத்தோங்கி வளர்ந்த போதும்,
ஒருமரம் தோப்பா காதென்
றுரைத்தனர் சான்றோர் கண்டீர்!
திருமர மாகி வீட்டில்
திகழ்ந்திருக் துறவாய் வாழ
இருமர மாக-ஒன்றை
இன்றுவேண் டுகிறேன்," என்றாள்.


"ஈவதும் ஏற்ப தாதற்
கியலாத தொன்றி யென்றே
கோவதும் சரியா காது;
நுவல்வதும் கெறியா காது;
மாவது பருவம் வாய்த்து
மலர்ந்துகாப் கனிந்தா லன்றி
ஆவது செய்வ தாகா
தழிப்பதே ஆவ" தென்றான்.


"ஆவலும் அதிகம் ஆகி
அவசரப் பட்டா யாமல்
நாவினால் நவின்றேன், அம்ம!
நனிநாண முற்றுச் சாவேன்;
கேவலம்! கேலி வேண்டாம்;
கெஞ்சுகின் றேன்நான்; என்றன்
தேவன் நீர்! அன்றோ’’என்றே
தேன்திகட் டிடச்சி ரித்தாள்.

129