பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆறேழு லட்சம் ருபாய்
அன்புடன் இறைக்க வேநாம்,
வேறேழு மேரு வாகி
விளங்கிற்றின் றெனவி யக்க,
நூறேழு லட்ச மாகி
நுழைந்துாரில் மிதக்கக் கண்டும்
மாறேழு வார்த்தை பேசி
மனம்மயக் குற்றாய்", என்றே,

சிரித்தனன் மெல்ல; நொந்த
சிந்தையின் சிறுமை தீரத்
திருத்தினன், சாந்தி நெற்றி
திகழும் கண் புருவம் கூந்தல்;
தரித்தனன் தோளைப் பற்றித்
தன் மார்பில் ஆர மாக!
வரித்தனன், "என்றும் நீஎன்
வாழ்க்கைக்குத் துணைவி" என்றே.

130