பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          வஞ்சத்தை வசையைப் பொய்யை
          வாழ்க்கையில் மறைக்க வேண்டி,
          நெஞ்சத்தைப் பொத்தல் செய்து
          நேர்மையை ஒழுக்கி விட்டு
          லஞ்சத்தைக் கொடுத்து, வாங்கி
          லாபத்தை யடைந்து காட்டில்
          பஞ்சத்தைப் பரப்புகின்ற
          பழிதனைக் கழிப்ப தற்கோ?

          உள்ளினோர்க் குவகை யூறும்
          உணர்ந்தவர்க் குறுதி யூட்டும்
          தெள்ளிய தமிழில் நல்ல
          திருக்குறள் இயற்றித் தந்த
          வள்ளுவன் பிறந்த நாட்டில்
          வறுமையும் பிணியும் மிஞ்சக்
          கள்ளவா ணிபம்தான் செய்த
          கயமையைக் கரைப்ப தற்கோ?

          பிணியாளி யாயோர் பிள்ளை
          பேச்சற்றுக் கிடக்கப் பாயில்
          தணியாத துயரத் தோடும்
          தாய்நின்று தவிக்கும் போது,
          'பணியாரம் வடைபா யாசம்
          பண்ணிப்போ டம்மா!' வென்று
          மணியான குரலில் முத்த
          மகன்கேட்ட கதையைப் போல,

12