பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சித்தூர்ச்சீ மான்கள் வந்தார்;
சீலியூர்ச் செல்வர் வந்தார்;
புத்துாரில் உள்ளோர் வந்தார்;
பூச்சியூ ரார்வந் தார்கள்.
கத்துாரும் கால்வாய் நீரால்
நாடார உணவை நல்கும்
முத்துாரில் மொய்த்தங் குள்ள
முன்னேற்றம் கானு மாறே!

வெளியூரார் முத்துாரின் வளர்ச்சி காணல்

பரகதி யென்ற சொல்லின்
பருப்பொருள் கூடத் தேரார்,
நரகதி யொன்றி நைந்தே
கனி அழு வோர்க ளாகித்
தெரிகதி யின்றி கின்று
திகைத் துளம் தேர வந்தே
மருகதி இன்றுற் றார்போல்
மகிழ்ந்தனர் முத்துார் கண்டே!

நாகப்பன் வீட்டில் விருந்திடல்

கண்ணிற்கு விருந்தாய்க் காட்சி,
காதிற்கு விருந்தாய் வார்த்தை,
உண்ணற்கு விருந்தாய் உண்டி,
உடம்புக்கு விருந்தாய் ஆடை ,
நண்ணற்கும் அரிய தான
நறுமணம் விருந்தாய் நாசிக்
கெண்ணற்கும் இயலா இன்பம்
ஈந்ததெல் லார்க்கும் அவ்வூர்!

134