பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பள்ளியைக் கட்டு தற்காய்ப்
.பல லட்சம் பணத்தைத் தந்த
வள்ளல்நா கப்பன் வீட்டு
வைபவம் அனைத்தும் பன்னி
ஒள்ளிய கவிஞன் நாட்டில்
உதித்தினி உரைத்தா லன்றித்
தெள்ளியே எடுத்துக் கூறத்
தெளிவிலேற் கியலா தன்மே
'
பகைத்திட எண்ணி வந்த
பணக்காரர் அனைத்தும் பார்த்துத்
திகைத்திட லானார்; கேட்டுத்
தெளிவுந்த தெரிந்த தன்பின்
நகைத்திட லானார்; வள்ளல்
நாகப்பன் இல்லம் சென்று
சுறத்திட லானார், உண்ட
சுவையான விருந்துச் சோற்றால்.

பள்ளிக் கட்டடம் அமைந்த சிறப்பு

வானிடை ஒளியைச் சிந்தி
வளரிள மதிய மென்கோ?
கானிடை முகில்கள் தங்கும்
கவினுடைச் சிகர மென்கோ?
கோனிடை அமர இட்ட
கொலுக்கூட இருக்கை என்கோ?
தேனுடை அடையைப் போலும்
திகழ்ந்திடும் பள்ளி ஊரில்!

135