பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்சில பயிர்கள் மட்டும்
செழிப்புடன் வளர, உள்ள
பற்பல பயிர்கள் காயப்
பாத்தியில் நீரைப் பாய்ச்சின்,
அற்பர்கள் இதயங் கூட
அதைக் கண்டு துடிக்கு மென்றால்
தற்பர னான தெய்வம்
'தகும்இது' எனுமோ? சாற்றீர்!

முத்துாரில் வாழா நின்ற
முந்நூறு குடும்பங் கள்தாம்
'இத்தோடு நமது துன்பம்
எல்லாமும் நீங்கிற்' றென்று
சொத்தோடு மகிழ்ந்து கூடிச்
சுகமாக வாழக் கண்டே
எத்தேவன் கோபம் கொண்டான்
என்பதை எண்ணிப் பார்ப்பீர்!

சத்தியம் சிவம்சுந் தரமாம்
சார்புகள் பற்றி, மக்கள்
புத்தியும் தெளிந்து சாலப்
பொழுதொத்துப் பொறுமை யாக
நித்தியம் உழைத்தின் றூரே
நிர்மல மாயிற் றென்றால்
சித்தியும் இதற்கு மேலே
செப்பவொன் றுளதோ?" என்றே



139