பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒத்தாரும் மிக்கா ரில்லான்
உண்மையை ஒர்ந்திவ் வாறாய்ச்
சத்தாரும் சொற்க ளாக்கிச்
சபையினில் பொழியக் கேட்டுச்
சித்துாரும் சீலி யூரும்
சிந்திக்கப் பூச்சி யூரும்,
புத்தூரும் முறுவல் பூத்து
போற்றிட அமர்ந்தான் நந்தன்.

கவிஞனின் கவினுரை

படித்ததை ஆழ்ந்தா ராய்ந்து
பயனுள்ள தனைப்பண் பாக
எடுத்ததைக் கேட்கும் மக்கள்
இதயத்தில் படியு மாறே
கொடுத்ததை யன்றி வேறிக்
குவலயத் தெதுவும் கொள்ளா
தடுத்ததை அறியும் நற்பே
ரறிஞனும் பேச லானான்.

“கல்வியே கருவி! முன்னோர்
கருத்தினைக் கண்டு கொள்ள;
கல்வியே செல்வம்! பின்னோர்க்
காகநாம் தேடி வைக்க;
கல்வியே அரசு! வாழ்க்கைக்
கெளரவம் பாது காக்க;
கல்வியே கடவுள்! நம்மைக்
கடைத்தேற்றி விடுவ தற்கே!

140