பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நேசர்காள்! எனது நெஞ்சில்
நிலைத்த உண் மையை எடுத்துப்
பேசினேன்; கேட்ட நீங்கள்
பேணினும் சரியே! அன்றி
ஏசினும் சரியே! என்றன்
இதயத்தில் கனிந்த அன்பும்
ஆசியும் உங்கட் குண்டெ”ன்
றமர்ந்தனன் கவிஞர் கோமான் !

கேட்டோர் வாழ்த்து
“ஆழ்க! எம் மூடப் பக்தி,
அறியாமை அனைத்தும்; ஆங்கே
விழ்கவே! தியர்கள் செய்யும்
வீண் விழாப் பூசை யெல்லாம்.
தாழ்க! எம் தலைகள் ஆய்ந்த
தமிழ்ப்பெரும் கவிஞர் தாளில்;
வாழ்க!நா கப்பன், நந்தன்
வையத்தில்” என்றார், வாழ்க!!

 

144