பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மெய்ம்மையும் நம்மை விட்டு
மென்மேலும் விலகு மாறு,
பொய்ம்மையைப் பொருந்தச் சொல்லிப்
புன்மைகள் மலிய வைத்தார்;
நொய்ம்மைய ராகி மக்கள்
நூல்பொரு ளறியா தின்று
செய்ம்முறை கெட்டு காடே
சீரழி வுற்ற தன்றோ?

அறம் இன்ன தென்ப தோரான்
அதிகாரி! ஐய கோ!நல்
திறம்இன்ன தென்ப தோரான்
திருவாளன்! தேசர் தன்னில்
புறம்இன்ன தென்ப தோரான்
புலவன்தான் ஆனார் என்றால்
நிறம் இன்ன தென்ப தோரார்
நீணிலத் துள்ளோர் யாரும்!

குற்றமுன் னுடைய தன்று;
குவலய மீதி லுன்னைப்
பெற்றவர் பிழையு மன்று;
பிறமொழி தமிழி னுாடே
உற்றதும், அதனை யுன்னி
உறுபொரு ளறியா மல்தான்
கற்றவர் கவலை யின்றிக்
கையாண்ட முறையே குற்றம்!

15