பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          நாகப்பன் செல்லல்

          என்றனன். இவை களெல்லாம்
          இதயத்தில் ஒன்றிற் றேனும்,
          அன்றென்னான்; ஆமென் னானாய்
          அகங்குன்றி முகமுங் குன்றி
          'நன்றி'யென் றுரைத்து விட்டு
          நாகப்பன் நகர்த்து மெல்லச்
          சென்றனன். கவிஞன் மேலும்
          சிந்தனை செய்யா நின்றான்.



          கவிஞன் மனத்துறுதி கொள்ளுதல்

          'சாலைக்குள் இரும ருங்கும்
          சமத்துவத் துடனி ருந்தும்,
          வேலைக்கு வருவோர் செல்வோர்
          வெப்பத்தை நிழலால் நீக்கிக்
          கோலுக்குப் பத்தாய்க் காய்த்துக்
          கொழுஞ்சுவைப் புளியைத் தக்தும்
          பாலிக்கும் மரத்தைப் பார்த்தும்
          பண்படான் பாவி', என்றான்.

          தவறுதான் செய்யான்; மற்றோர்
          தாம்செயின் தனை மறந்தே
          அவியுறும் அனலி தென்ன
          அகங்கொதித் தெழுவான்; நாளும்
          செவியுறு செல்வம் சேர்த்துச்
          சீராகத் தருவான் சேரக்
          கவிஞனும் திரும்பி ஏரிக்
          கரைநோக்கி நடக்க லுற்றான்.

16