பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          ஆங்கிலக் கல்விப் பண்பும்
          அமைந்தகம் புறமென் றோதும்
          ஓங்கிய தமிழின் பண்பும்
          உள்ளத்தி லொன்ற என்றும்
          தூங்கிய நேர மன்றித்
          தூயஅக் கவிஞன் தன்னை
          நீங்காது வைத்துக் காக்கும்
          நிலையான நேசன் நந்தன்.

          நந்தன், கவிஞனின் கலக்க நிலையறிதல்
          “காலையைக் காட்டி வந்த
          கதிரவன் பகலும் காட்டி,
          மாலையைக் காட்டி, மெல்ல
          மலையிடை மறைய லானான்;
          ஆலையில் கரும்பு போலென்
          அகம்மிக நைய நீரோ
          வேலையிங் கெதுவு மின்றி
          வீற்றிருக் கின்றீர்,” என்றான்.

          நூறென்று நுவலத் தக்க
          நுவலுதற் கரிய காட்சி
          வேறொன்றும் காணா னாகி
          வேதனை யொன்ற நெஞ்சில்
          சோறின்றி நீரு மின்றிச்
          சோர்வொன்றி, யன்று தன்மெய்
          ஊறொன்று மென்றும் ஓரா
          துணர்வொன்றி இருந்தான் தானும்,

20